24 வயது இளம் நடிகை மாரடைப்பால் மரணம்..!!

மலையாள நடிகை லக்ஷ்மிகா சஜீவன் (24) ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவில் நேற்று உயிரிழந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு வெளியான ‘காக்கா’ என்ற படத்தில் தன்னுடைய நடிப்பின் மூலம் கவனம் பெற்றார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்ஷ்மிகா சஜீவனின் உடல் கேரளாவுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஷார்ஜாவில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால், தேவையான போலீஸ் சம்பிரதாயங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை. திங்கள்கிழமை காவல்துறை நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் உடல் அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரியும் லக்ஷ்மிகா, தனது தோழியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

Read Previous

மீனவர்கள் கைது : அன்புமணி கண்டனம்..!!

Read Next

‘சலார்’ படத்துக்கு A சான்றிதழ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular