
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகின்றது. இதனைத் தொடர்ந்து அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதித் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்தின் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ள நிலையில் அஜீத் தற்போது கார் ரேசில் முழு கவனம் செலுத்தி வருகின்றார்.
கடந்த மாதம் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் கலந்து கொண்டு அவருடைய அணி மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பா கார் பந்தயத்தில் களமிறங்க அஜித் தற்போது தயாராகி வருகின்றார். இதனால் வருகின்ற அக்டோபர் மாதம் வரை நடிக்க மாட்டேன் என ஏற்கனவே அஜித்தே அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த மாதம் இறுதியில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளதாக தெரிகிறது. இப்படியான நிலையில் இப்படத்தில் திரிஷா மட்டுமல்லாமல் மற்றொரு நடிகையும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இந்த படத்தில் அவர் இணைந்து நடித்துள்ளார். அந்த நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினியாக வலம் வந்தபோது அஜித்துக்கு ஜோடியாக அவள் வருவாளா, வாலி மற்றும் உன்னைக் கொடு என்னை தருவேன் ஆகிய மூன்று திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். அதன்பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்காமல் இருந்த அவர் தற்போது 25 வருடங்களுக்குப் பிறகு குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏற்கனவே திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்த சிம்ரன் தற்போது இரண்டாவது முறையாக அவர் இயக்கத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது