25 நாட்களை கடந்த ‘லியோ’ திரைப்படம்..!!

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அக்.19ஆம் தேதி வெளியான இப்படம், ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், இலங்கை மற்றும் கேரளாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ள நிலையில், புது போஸ்டரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இப்படம் ரூ.500 கோடி வரை வசூலித்துள்ளது. தீபாவளிக்கு புது படங்கள் வெளியானலும் தமிழ்நாட்டில் சில திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Read Previous

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை..!!

Read Next

உயர்நீதிமன்றத்துக்கு 2 நீதிபதிகள் மாற்றம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular