பிரபல கால்பந்து வீரர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
உருகுவே நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஜூவான் இஸ்குவேர்டோ (27) இவர் கடந்த ஆகஸ்ட் 22 கால்பந்து போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது,இதனை தொடர்ந்து அவரை மருத்துவமனை அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருந்த நிலையில், திடீரென ஜூவான் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து 27ஆம் தேதி உயிரிழந்ததாக தகவல் வெளிவந்தது, இளவயது ஜூவான் உயிரிழந்த சம்பவம் அவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் கால்பந்து சகவீரர்கள் மத்தியிலும் பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருத்தத்தை உண்டு பண்ணியது, இதனால் பலரும் தங்களது இணையதள பக்கத்தில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்..!!