
உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராமமூர்த்தி. இவர் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென ராமமூர்த்தியின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. அப்போது தீ மள மளவென கொழுந்து விட்டு எரிந்து அருகில் இருந்த மணிகண்டன், லட்சுமி நாராயணன் ஆகியோரது வீடுகளிலும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 3 குடிசை வீடுகளும் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதன் சேதமதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது