3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு..!! முழு லிஸ்ட் இதோ..!!

இந்த ஆண்டில் 3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு வெளியாகி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் ‘கேல் ரத்னா’, அர்ஜுனா உள்ளிட்ட விருது வழங்கி கவுரவிக்கப்படும். அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான ‘கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ விருதுக்கு தகுதியானவர்கள் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் செஸ் வீரருமான குகேஷ், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார், மனு பாக்கர் உள்ளிட்ட நபர்களுக்கு கேல் ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்தை சேர்ந்த மூன்று வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ள அர்ஜுனா விருதுக்கான பட்டியல் குறித்து கீழே பார்க்கலாம்.

  1. ஜோதி – யர்ராஜி தடகளம்
  2. அன்னு – ராணி தடகளம்
  3. நிது – குத்துச்சண்டை
  4. சவீட்டி – குத்துச்சண்டை
  5. வந்திகா அகர்வால் -செஸ்
  6. சலிமா டெட் -ஹாக்கி
  7. அபிஷேக் -ஹாக்கி
  8. சஞ்சய் -ஹாக்கி
  9. ஜர்மன்ப்ரீத் சிங் – ஹாக்கி
  10. சுக்ஜீத் சிங் -ஹாக்கி
  11. ராகேஷ் குமார் பாரா – வில்வித்தை
  12. ப்ரீத்தி பால் பாரா – தடகளம்
  13. ஜீவன்ஜி தீப்தி – பாரா தடகளம்
  14. அஜீத் சிங் – பாரா தடகளம்
  15. சச்சின் சர்ஜேராவ் கிலாரி – பாரா தடகளம்
  16. தரம்பிர் – பாரா தடகளம்
  17. பிரணவ் சூர்மா – பாரா தடகளம்
  18. எச் ஹோகடோ செமா – பாரா தடகளம்
  19. சிம்ரன் – பாரா தடகளம்
  20. நவ்தீப் – பாரா தடகளம்
  21. நிதேஷ் குமார் – பாரா பேட்மிண்டன்
  22. துளசிமதி முருகேசன் – பாரா பேட்மிண்டன்
  23. நித்யா ஸ்ரீ சுமதி சிவன் – பாரா பேட்மிண்டன்
  24. மனிஷா ராமதாஸ் – பாரா பேட்மிண்டன்
  25. கபில் பர்மர் -பாரா ஜூடோ
  26. மோனா அகர்வால் – பாரா ஷூட்டிங்
  27. ரூபினா பிரான்சிஸ் – பாரா படப்பிடிப்பு
  28. ஸ்வப்னில் சுரேஷ் குசலே – படப்பிடிப்பு
  29. சரப்ஜோத் சிங் – துப்பாக்கி சூடு
  30. அபய் சிங் – ஸ்குவாஷ்
  31. சஜன் பிரகாஷ் – நீச்சல்
  32. அமன் – மல்யுத்தம்

Read Previous

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2025..!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

Read Next

PNB வங்கி வேலைவாய்ப்பு..!! கல்வித்தகுதி: 12th..!! சம்பளம்: Rs. 64,480..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular