இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கான கடைசி மற்றும் 3-வது ஒரு நாள் போட்டி தொடர் இன்று (ஜன.18) இந்தூரில் நடைபெற இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டி தொடரில் இதுவரை சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வி கண்டதே இல்லை. அதேபோல், இந்தூர் மைதானத்தில் ஒரு நாள் தொடர் போட்டியில் தோல்வியை சந்தித்தது கிடையாது. 1-1 என சமனில் உள்ள நிலையில், தொடரை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.




