30 வருட தோசைக்கல் 3 நிமிடத்தில் பளிச்சென்று மாறும் : கொஞ்சம் கல் உப்பு தூவி விட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்..!!

பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த தோசைக்கல்லையும் எப்படி சுத்தப்படுத்தி பயன்படுத்தும் நிலைக்கு கொண்டு வருவது என இந்த குறிப்பில் பார்க்கலாம்..

ஏறத்தாழ 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த தோச கல்லையும் தற்போது உபயோகப்படுத்தும் நிலைக்கு நம்மால் கொண்டுவர முடியும் அதற்கான வழிமுறைகளை இதில் காண்போம்..

முதலில் தோசை கல்லை எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக சூடு படுத்த வேண்டும் அடுப்பில் தோசை கல் சூடாகி வரும்போது ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து அதில் தூவி விட வேண்டும். சிறிது நேரம் கழித்து இதில் எலுமிச்சை பல சாறு பிழிந்து விட வேண்டும் இவ்வாறு எலுமிச்சை சாறு பிழிந்து பின்னர் அதே எலுமிச்சை தோல் வைத்து தோசை கல்லை தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும் இப்படி செய்யும் போது தோசை கல்லில் இருந்து துருவம் மற்றும் அடுக்குகள் சிறிது சிறிதாக நீங்க தொடங்கும். இதைத் தொடர்ந்து தோசை கல் மீது பாமாயில் ஊற்ற வேண்டும் மேலும் ஒரு பேப்பர் வைத்து தோசை கல் முழுவதும் பாமாயிலை தேய்த்து விட வேண்டும் இப்படி செய்வதால் தோசை கல்லில் இருந்து துரு கறைகளையும் அகற்ற முடியும் இதனை செய்யும் போது அடுப்பை ஆப் செய்யக்கூடாது இப்போது மீண்டும் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு அதன் தோலை வைத்து தோசை கல்லை சுத்தப்படுத்த வேண்டும். இதன் பின்னர் அடுப்பை ஆப் செய்து விட்டு தோசை கல் மீது இருக்கும் உப்பை துடைத்து அகற்றி விடலாம். இதை அடுத்து தோசை கல்லை வாழைத்தண்டு வைத்து துடைக்க வேண்டும் இவ்வாறு துடைத்த பின்னர் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சோப்பு கொண்டு தோசை கல்லை கழுவ வேண்டும். இதற்கு அடுத்த ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் சிறிதளவு டூத் பேஸ்ட்டை கலந்து அதனை தோசைக்கல் மீது தேய்க்க வேண்டும் இவ்வாறு தேய்த்த பின்னர் ஐந்து நிமிடங்களுக்கு தோசை கல்லை மீண்டும் தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும். இறுதியாக சுத்தம் செய்த தோசை கல்லில் எண்ணெய் தடவி சுமார் 3 மணி நேரங்கள் வெயிலில் காய வைக்க வேண்டும் இதன் வாயிலாக தோசைக்கல் புதியது போன்று மாறிவிடும்..!!

Read Previous

பிப்ரவரி மாதத்தில் கொத்தாக வரும் விடுமுறை எப்போ தெரியுமா? மாணவர்களுக்கு குஷிதான்..!!

Read Next

நவரத்தினங்கள் உலகில் எப்படி தோன்றின என்று உங்களுக்கு தெரியுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular