300 வகை நோய்களை நீக்கும் முருங்கைக் கீரை..!! கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

Oplus_131072

300 வகை நோய்களை நீக்கும் முருங்கைக் கீரை
முருங்கைக் கீரையானது 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களைக் குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது. முருங்கைக் கீரையில் 90 வகையான சத்துகளும், 46 வகையான மருத்துவ குணமும் நிறைந்து இருப்பதாக ஆய்வுக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

முருங்கைக்கீரை ஒரு மருத்துவ குணம்மிக்க மூலிகை. மற்ற கீரை வகைகளை விட அதிக அளவு புரதச்சத்தும், மற்ற சத்துகளும் முருங்கை கீரையில் நிறைந்துள்ளன. முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான முக்கியமான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மற்ற எந்த தாவர உணவிலும் முருங்கையில் இருப்பது போன்ற முக்கியமான அமினோ அமிலங்கள் இல்லை. மேலும், முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது. செயற்கையாக நாம் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளில் உள்ள இரும்புச்சத்தை விட, முருங்கைக் கீரையில் இயற்கையாக அமைந்துள்ள இரும்புச்சத்தை நம் உடல் எளிதில் கிரகித்துக் கொள்ளும்.

முருங்கைக்கீரை மருத்துவ பயன்கள்

1. முருங்கைக்கீரையோடு பூண்டு, மஞ்சள், உப்பு, மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நாய்க்கடி குணமாகும்.

2. முருங்கைக்கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

3. வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் முருங்கைக்கீரை உண்டால் நீங்கும்.

4. முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் மற்றும் உடலில் உள்ள வலிகள் நீங்கும்.

5. முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நல்ல ரத்தம் ஊறும். பற்கள் பலப்படும், முடி நீண்டு வளரும், நரை முடி ஏற்படுவது குறையும் மற்றும் தோல் வியாதிகள் நீங்கும்.

6. மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு முருங்கைக்கீரை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

7. முருங்கைக்கீரையை வாரத்தில் குறைந்தது ஒருமுறையாவது உணவுடன் எடுத்து கொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.

8. முருங்கைக்கீரையை சூப் போல செய்து சாப்பிட்டால் மூட்டு வலி பறந்து போய்விடும்.

9. முருங்கைக்கீரையானது கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவித்து பிரசவத்தை விரைவுபடுத்தும். முருங்கை கீரையை கொண்டு தயாரிக்கப்படும் உணவுவானது தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

10. முருங்கைக்கீரை சூப்பானது ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு நல்லது.
11. முருங்கைகீரையானது ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை போக்கும் வல்லமை வாய்ந்தது மேலும் இரத்த விருத்திக்கும் நல்ல உணவு.

Read Previous

காலையில் கண் விழித்ததும் இதையெல்லாம் பார்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகுமாம்..!!

Read Next

ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்கும் ஒரே ஓரு அர்ச்சனை இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular