35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்..!!

பெண்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர். ஆனால் நல்ல நிலைக்கு வருவதற்குள், பெண்களுக்கு குறைந்தது 35 வயதாகிவிடுகிறது. இவ்வாறு 35 வயதானப் பின்னர், சிலருக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதோடு, கர்ப்பமான பின்பு சிக்கல்களை சந்தித்து, பின் அது குழந்தை அல்லது தாயின் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவில் இருக்கிறது.

எப்போதும் குழந்தை பெற்றுக் கொள்வதை மட்டும் எக்காலத்திலும் தள்ளி வைக்கக்கூடாது. ஆனால், 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு சில நடைமுறைகளை பின்பற்றினால் எளிதில் கருத்தரிப்பதோடு, நல்ல ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்கலாம். எப்போதும் நல்ல ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டும். அதிலும் இறைச்சி, மீன், பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம், கருமுட்டையின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் முன், குறைந்தது மூன்று மாதத்திற்கு போலிக் ஆசிட் மாத்திரைகள் அல்லது உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், அதற்கு முதலில் சரியான நேரத்தில் தேர்வு செய்ய வேண்டும்.

மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களான யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொண்டு, மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கு வயதானால், விந்தணுவின் உற்பத்தியானது குறைந்துவிடும். எனவே ஆல்கஹால், சிகரெட் போன்றவற்றை நிறுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். 35 வயதிற்கு மேல் கருத்தரிக்க நினைக்கும் முன், முதலில் மருத்துவரைச் சென்று அவர்களிடம் உடல் முழுவதும் பரிசோதனை செய்து கொள்வதோடு, கருத்தரிக்க வாய்ப்புள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Read Previous

கள்ளக்காதல் – இடையூறாக இருந்த மனைவி சுட்டுக் கொலை..!! போலீசார் விசாரணை..!!

Read Next

ஒன்றரை ஆண்டுகளாக இளம்பெண் மிரட்டி பலாத்காரம்..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular