Oplus_131072
40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்…….
அகத்திக்கீரை – இரத்தத்தை சுத்தமாக்கிபித்தத்தை தெளியவைக்கும்.
காசினிக்கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
சிறுபசலைக்கீரை – சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
பசலைக்கீரை – தசைகளை பலமடையச் செய்யும்.
கொடிபசலைக்கீரை – வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
மஞ்சள் கரிசலை கல்லீரலை பலமாக்கும். காமாலையை விலக்கும்.
குப்பைகீரை பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.
அரைக்கீரை – ஆண்மையை பெருக்கும்.
புளியங்கீரை – சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
பிண்ணாருக்குகீரை – வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
பொன்னாங்கன்னி கீரை – உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.
சுக்கா கீரை – இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
வெள்ளை கரிசலைக்கீரை – இரத்தசோகையை நீக்கும்.
முரங்கைக்கீரை -நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
முடக்கத்தான்கீரை – கை, கால் முடக்கம் நீக்கும்
வாயு விலகும்.
புண்ணக்கீரை – சிரங்கும். சீதளமும் விலக்கும்.
புதினாக்கீரை – இரத்தத்தை சுத்தம் செய்யும்,
அஜீரணத்தை போக்கும்.
நஞ்சுமுண்டான் கீரை – விஷம் முறிக்கும்.
தும்பைகீரை – அசதி, சோம்பல் நீக்கும்.
முருங்கைகீரை – சளி, இருமலை துளைத்தெரியும்.
முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
பருப்புகீரை – பித்தம் விலக்கும், உடல் சூட்டை
தணிக்கும்.
புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்.
மணலிக்கீரை- வாதத்தை விலக்கும். கபத்தை கரைக்கும்.
மணத்தக்காளி கீரை – வாய் மற்றும் வயிற்றுப்புண்
குணமாக்கும். தேமல் போக்கும்.
முளைக்கீரை – பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்.
சக்கரவர்த்தி கீரை – தாது விருத்தியாகும்.
வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காசநோய்களை விலக்கும்.
தூதுவலை-ஆண்மை தரும். சருமநோயைவிலக்கும்.
சளித்தொல்லை நீக்கும்.
தவசிக்கீரை – இருமலை போக்கும்.
சாணக்கீரை – காயம் ஆற்றும்.
வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
விழுதிக்கீரை – பசியைத்தூண்டும்.
கொடிகாசினிகீரை – பித்தம் தணிக்கும்.
துயிளிக்கீரை – வெள்ளை வெட்டை விலக்கும்.
துத்திக்கீரை – வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
காரகொட்டிக்கீரை – மூலநோயை போக்கும்..




