தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக கருதப்படும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான “ரோஜா” என்கின்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஏ ஆர் ரகுமான்.
இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என்று பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து கொடுத்துள்ளார். ஆஸ்கர் விருது, கோல்டன் கிளப் விருது ஆகிய பல்வேறு உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, கோல்டன் கிளப் விருது மற்றும் பாஃப்டா விருது போன்ற உயரிய விருதுகளை வென்ற முதல் இந்தியர் ஏ ஆர் ரகுமான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது அபாரமான இசை நுட்பத்தினால் இவர் ரசிகர்களால் இசை புயல் என்றும் அழைக்கப்படுகிறார் இந்நிலையில் இந்த வருடம் ரகுமான் இசையில் “அயலான்” மற்றும் “லால் சலாம்” ஆகிய இரு திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.
“அயலான்” திரைப்படம் வெற்றி பெற்றது. ஆனால் “லால் சலாம்” படம் தோல்வியை தழுவியுள்ளது. மேலும் படத்தின் இசையும் ரகுமான் இசையை போல் இல்லை என்று அனைவரும் வெளிப்படையாகவே கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து கடைசியாக வெளியான “ஆடு ஜீவிதம்” என்கின்ற படத்தில் ரகுமான் இசை வழக்கம் போல் மிகவும் கொண்டாடப்பட்டுள்ளது. அடுத்ததாக ரகுமான் இசையில் “தக் லைப்”, “ராயன்” ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் “நான் சிறு வயதில் இருந்தே உழைத்து வருவதால் 40 வயதில் ஓய்வு பெற எண்ணினேன் ஆனால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணமே உள்ளதால் அதை செயல்படுத்த முடியவில்லை”, என்று அவர் கூறியுள்ளார்.