
பொதுவாகவே எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவை அன்பு தான். அதனை அடிப்படையாக வைத்து தான் இந்த உலகம் இயங்குகின்றது என்றால் மிகையாகாது.
குறிப்பாக மனிதர்கள் அன்புக்காகவும் பாசத்துக்காகவும் அதிகமாக ஏங்குகின்றார்கள் என்பது உளவியல் ரீதியான உண்மை.
அதனால் தான் மனிதர்கள் மத்தியில் காதல் உணர்வு தவிர்க்க முடியாத விடயமாக பார்க்கப்படுகின்றது. இந்த உலகத்தில் மிக மிக பழைய உணர்வும் காதல் தான்.
மிக மிக புதிய உணர்வும் காதல் தான்.இது யாருக்கு யார் மீது எந்த சமயத்தில் ஏற்படும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது.
ஒரு மந்திரம் போல் வாழ்வில் நிகழ்ந்துவிடுகின்றது. தங்களை மற்றவர்கள் விரும்ப வேண்டும் என்று தான் அனைவருமே ஆசைப்படுவார்கள்.
ஆனால் காதல் விடயத்தில் மாத்திரம் தனது துணையை தாங்கள் மட்டும் தான் நேசிக்க வேண்டும் என்ற வித்தியாசமான உணர்வும் ஏற்படும்.
இந்த உணர்வு தான் காதல் என்று கூட சொல்லாம். காதலுக்கான வரைவிலக்கணம் நபருக்கு நபர் வேறுப்படும் அதிலும் பெண்களின் பார்வையில் காதல் மிகவும் உன்னதமான விடயமாக பார்க்ப்படுகின்றது.
அந்தவகையில் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களின் காதல் பற்றிய புரிதல் எப்படி இருக்கும் என்பது குறித்தும் இவர்கள் உளவியல் ரீதியாக தங்களின் துணையிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் என்னென்ன என்பது தொடர்பிலும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
உயிரியல் ரீதியில் ஆண்களை விடவும் பெண்கள் விரைவில் முதிர்சியுயடைபவர்களாக இருப்பதனால் , பெரும்பாலான ஆண்கள் மற்ற பெண்களுடன் தங்களின் மனைவியை ஒப்பிட்டு பார்க்கும் தன்மையை கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் பெண்களுக்கு பொதுவாகவே மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்க்கும் ஆண்களை ஒருபோதும் பிடிக்காது. அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் காணப்படுகின்றது.
ஐ லவ் யூ’ என்ற வார்த்க்கு பெண்கள் கொடுக்கும் மதிப்பு ஆண்களை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். 40 வயதிற்குட்பட்ட பெண்கள் அடிக்கடி தனது துணையிடமிருந்து ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை எதிர்பார்க்கின்றார்கள். இது அவர்களை உளவியல் ரீதியில் பெரிதும் மகிழ்விக்கின்றது.
பெண்களை பொருத்தவரையில் நேர்மையாக இருக்கும் ஆண்களை தான் அதிகம் விரும்புகின்றார்கள். 40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு, காதல் என்பது தரமான நேரத்தையும் கவனத்தையும் துணைக்கு கொடுப்பதே ஆகும். அதனை தான் இவர்கள் துணையிடம் அதிகம் எதிர்ப்பார்க்கின்றார்கள்.
பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்கும். அவர்களின் உணர்வுகளுடன் விளையாடும் ஆண்களை பெண்கள் வெறுக்கின்றார்கள். 40 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்களின் துணை தங்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் தங்களை பாராட்ட வேண்டும் எனவும் எதிர்ப்பார்கின்றார்கள்.