
உடல் பிரச்னைகளில் மிகவும் முக்கியமானவற்றில் சிறுநீரகக் கோளாறும் ஒன்றாகும். அதிலும் 40 முதல் 45 வயதுக்கு மேல் ஆண்களுக்கு சிறுநீரகப் பாதையில் எரிச்சல் ஏற்படும். இதற்கு காரணம் ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி பெரிதாகி விடும்.
அதாவது புராஸ்டேட் எனும் சுரப்பி பெரிதாகி சிறுநீர்ப்பையின் கழுத்துப் பகுதியை அழுத்துவதால் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும் பிரச்னை ஏற்படும். புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைந்தாலோ அல்லது அப்பகுதியில் கட்டிகள் ஏதேனும் இருந்தாலோ இந்தப் பிரச்னை ஏற்படும்.
புராஸ்டேட் சுரப்பி பெரிதானால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சொட்டுசொட்டாக சிறுநீர் வெளியேறுதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு சல்பர் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக சின்ன வெங்காயம், பூண்டு போன்றவை.
தினமும் 5 சின்ன வெங்காயம், தயிர், மிளகு தூள் சேர்த்து கலந்து உணவுக்கு முன் காலை அல்லது மதியம் ஏதாவது ஒரு வேளை எடுக்கும்போது நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அதேபோல தான் மஞ்சள் குடிநீர். சுத்தமான மஞ்சள் பொட்டி அல்லது மஞ்சளை இடித்து 1 கிளாஸ் தண்ணீரில் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் சீரகம் போட்டு முக்கால் கிளாஸ் வரும் வரை கொதிக்கவிட்டு குடிக்கலாம். இதனால் தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.