441 தமிழக பள்ளிகளில் சாதிய பாகுபாடு..!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் ஜாதிகள் இல்லை, மனிதரால் அனைவரும் ஒன்றே என்று கூறும் நிலையில் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையே உள்ள ஜாதியை பாகுபாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் ஜாதியை பாகுபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் ஜாதிய பாகுபாடு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் தற்போது தமிழகம் எங்கும் உள்ள 441 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஜாதியை பாகுபாடு 39 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் தீண்டாமை பார்ப்பது, தலித் மாணவர்களுக்கு அதிக தண்டனைகள் தருவது, மாணவர்கள் தீண்டாமை பார்ப்பது என அந்த கொடுமைகள் பட்டியல் தொடர்ந்து நீண்டு கொண்டு செல்கின்றது. இந்த ஆய்வு அறிக்கை பெரும் அதிர்சியினை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

கணவர் இறந்த துக்கத்தில், 3 மணிநேரத்தில் உயிரைவிட்ட மனைவி..!! நாமக்கல்லில் கண்ணீர் சோகம்.!!

Read Next

பணம் கேட்ட நபருக்கு, ஒரே போட்டோவில் கலாய் பதிலடி..!! வைரலாகும் வாட்சப் பேச்சு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular