
45 நாட்கள் சர்க்கரை சாப்பிடுவது நிறுத்தினால் என்னவாகும் தெரியுமா..??
சர்க்கரை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரைக்கும் வெறும் சர்க்கரையை கொடுத்தால் கூட அனைவரும் சாப்பிடுவோம். அந்த அளவிற்கு சர்க்கரை அனைவருக்கும் பிடிக்கும். இந்நிலையில் 45 நாட்கள் சர்க்கரை சாப்பிடாவிட்டால் என்ன ஆகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தினசரி நம் எடுத்துக் கொள்ளும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உடலில் பல விதமான மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்றுதான் எடை குறைவது. 45 நாட்கள் சர்க்கரையை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் ரத்த அழுத்தம் சீராகி, உடலில் உள்ள கொழுப்புகள் குறையும் என கூறப்படுகிறது. மேலும் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்துவதன் மூலம் சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் உடல் பருமன் போன்றவைகளில் இருந்து நாம் தப்பிக்கலாம்.