தமிழ் திரை உலகில் 90s கதாநாயகிகளில் ஒருவராக தொடங்கி தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஜோதிகா. தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார் மேலும் தமிழ் சினிமாவில் வாலி என்ற படத்தில் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஜோதிகா.
மேலும் விஜயுடன் நடித்த குஷி இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. தொடர்ந்து பேரழகன் சந்திரமுகி போன்ற படங்களும் வெற்றி தந்தது. இவர் சந்கர் சாதனா என்பவரின் மகள் ஆவார். ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
மேலும் இவர் தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை அழித்துள்ளார். அதற்காக ஜோதிகா பல விருதுகளையும் வென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜோதிகா நடித்த 36 வயதினில் படம் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.
சூர்யா ஜோதிகாவின் கெமிஸ்ட்ரி தமிழ் திரை உலகில் மக்களை வெகுவாக கவரப்பட்டது. கணவர் சூர்யா மற்றும் இவர் இருவரும் இணைந்து ஒரே மேடையில் விருது பெற்றுள்ளனர். மேலும் பொதுவாக ஜோதிகா எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக தான் இருப்பார்.
தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ சூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram