
சைத்ரா நவராத்திரி கொண்டாட்டங்களுடன் இணைந்து சிறப்பு டூர் பேக்கேஜ்களை IRCTC அறிமுகம் செய்துள்ளது. இதில், வைஷ்ணோதேவி, காங்க்ராதேவி, ஜ்வாலா ஜி, சாமுண்டி மற்றும் சிந்த்பூர்ணி கோவில்கள் உள்ளன. ஐஆர்சிடிசி இந்த ஐந்து கோயில்களுக்கும் குறைந்த கட்டணத்தில் பயணத்தை வழங்குகிறது. சிறப்பு சுற்றுலா தொகுப்பில் வைஷ்ணோதேவி கோவில் உட்பட ஐந்து கோவில் யாத்திரைகள் அடங்கும். சுற்றுப்பயணத்தின் காலம் ஐந்து பகல் மற்றும் ஆறு இரவுகள். முதல் கட்ட பக்தர்களின் பயணம் மார்ச் 22ஆம் தேதியும், இரண்டாம் கட்ட பக்தர்களின் பயணம் மார்ச் 29ஆம் தேதியும் தொடங்கும்.