5 பேர் கும்பலால் ஜிம்மில் 17 வயது சிறுமி பலாத்காரம்..!! பெற்றோரின் மானப்பிரச்சனையால் விஷம் குடித்து உயிரை மாய்த்த சோகம்.!!

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்புடன் வைக்கலாம் என கருதியை சிறுமியை சீரழித்த கும்பல், அவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ள துயரம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிரு மாவட்டம் பகுதியில் வசித்து வரும் 17 வயதுடைய சிறுமி தான் ஜிம்முக்கு செல்ல வேண்டும் என தன்னுடன் பயிலும் நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் சிறுமியை ஜிம்முக்கு அழைத்துச் சென்று சேர்த்து விடுவதாக கூறியுள்ளார். மே பதினொன்றாம் தேதி சிறுமியை ஜிம்முக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு அவரின் நண்பர்கள் இருந்துள்ளனர். இதனால் பயந்து போன சிறுமி தான் நாளை வருவதாக கூறி புறப்படும் முற்பட்டாலும் எந்த ஒரு பயனும் இல்லை. சிறுமியை ஜிம்முக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கயவர்கள் ஐவரும் சேர்ந்து அத்துமீது உள்ளனர்.

ஒருவர் பின் ஒருவரான சிறுமி  சீரழிக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஜிம் உரிமையாளர் எதிர்பாரா விதமாக வந்த போது சிறுமி மட்டும் அரை மயக்கத்தில் இருந்துள்ளார். அவரிடம் விசாரித்த போது உண்மை தெரிய வந்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார். உடல் நல குறையுடன் அவதிப்பட்ட சிறுமி உள்ளூர் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டு பின் மறுநாள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் கூறி கதற அவர்கள் குடும்பம் மானம் போய்விடும் என எதுவும் கூறாமல் இருந்தனர்.

ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து முயற்சி செய்துள்ளார், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் உயிர் இழந்தார். சிறுமியின் தந்தை மருத்துவர்களிடம் மகளுக்கு நடந்ததை கூறி காதறி உள்ளார். உண்மையை அறிந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தது விசாரணை மேற்கொண்டு அதிகாரிகள் ரோஹித், அஜய், மோஹஷின், ஜவேத், யூனிஸ் ஆகிய ஐந்து இளைஞர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் வகுப்பு பிரச்சனையையும் உண்டாக்கி இருப்பதால் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read Previous

டீசல் ஊற்றி பரோட்டா செய்யும் காட்சிகள்..!! இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!

Read Next

7ம் வகுப்பு படித்திருந்தால் கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular