5 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய மும்பை வீரர்..!! கும்ப்ளேவின் சாதனை சமன் செய்தார் மும்பை வீரர்..!!

லக்னோவிற்கு எதிரான எலிமினேட்டர் சுற்றுப்போட்டியில் 5 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி மும்பை வீரர் ஆகாஷ் மத்வால் கும்ப்ளேவின்  சாதனையை சமன் செய்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடரின் எலிமினேட்டர் சுற்றுப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி தொடர் இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து 16.3 ஓவரில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த போட்டியில் 81 வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றியினை பெற்றது .இதை தொடர்ந்து குவாலிஃபையர் 2வில் குஜராத் அணியுடன் மோத உள்ளது.

இந்த போட்டியில் மும்பை அணி பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்கள் வீசி வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணி வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிராக பெங்களூரு அணிக்காக விளையாடிய அணில் கும்ப்ளே 5 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விட்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் 14 ஆண்டு கால சாதனையை ஆகாஷ் சமன் செய்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு..!! ஜூன் 5 முதல் 14ஆம் தேதி வரை முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு..!!

Read Next

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு முன்னால் முதல்வர் மாயாவதி ஆதரவு..!! எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular