தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அம்மா உணவகங்கள் திறந்து வைத்தது போல், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு “அண்ணா உணவகம்” திறந்து வைத்தார். இது மறைந்த முதல்வர் என். டி. ஆர் அவர்களின் நினைவாக 2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன்பிறகு வந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனதால், அனைத்து அண்ணா உணவகங்களும் மூடப்பட்டது.
தற்போது சமீபத்தில் சந்திரபாபு நாயுடு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் மீண்டும் சுதந்திர தினமான நேற்று ஆந்திராவில் முக்கிய இடங்களில் அண்ணா உணவகங்களை திறந்து வைத்தார். வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் 203 அண்ணா உணவகங்களை திறந்து வைப்பதாக கூறியுள்ளார். இந்த உணவகங்களில் மூன்று வேளையும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்திற்கு அனைவரும் நன்கொடை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.