50 ஆண்டுகளை நிறைவு செய்தது சிவாஜி கணேசனின் தங்கப்பதக்கம் திரைப்படம்..!!

தமிழ் திரை உலகின் ஜாம்பவானாகவும் நடிப்பின் திலகமாகவும் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன் .பி. மாதவன் இயக்கத்தில், மெல்லிசை மன்னன் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் சிவாஜி புரொடக்சன் தயாரிப்பில் கடந்த 1974 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் தான் “தங்கப்பதக்கம்”.

சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா, ஸ்ரீகாந்த் ,மேஜர் சுந்தர்ராஜன், சோ, சுருளிராஜன், மனோரமா மற்றும் பிரமிளா உட்பட பல பிரபலங்கள் இணைந்து உருவாகிய இத்திரைபடம்  அன்றைய நாளில் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது, 1974 ஆம் காலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த “தங்கப்பதக்கம்” திரைப்படம் தெலுங்கு, ஹிந்திஇ கன்னடம் ஆகிய மொழிகளிலும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

மேலும் தமிழில் திரைப்படம் 175 நாட்களை கடந்து ஓடியது, நேர்மையான காவல் அதிகாரிக்கும், நேர்மையை எதிர்க்கும் நபருக்கும் இடையிலான கதையின் பாசம் என பல தனித்துவத்துடன் உருவான இந்த திரைப்படம் காலங்களை கடந்தும் ரசிக்கப்படும் ஒரு காவியம், இத்திரைப்படம் வெளியாகி இந்த மாதத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

Read Previous

ஈஸ்வரி வீட்டிற்கு திரும்புவாரா..? அல்லது மாமியார் மருமகள் சண்டை தொடருமா..? பாக்கியலட்சுமி நெடுந்தொடரின் இந்த வாரம் ப்ரோமோ..!!

Read Next

உங்கள் உடலில் விட்டமின் பி குறைபாடா..? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular