மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் அனிதா என்பவருக்கும், அஜய் என்பவருக்கும் கடந்த ஜூன் 24ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களில் பணம் மற்றும் நகைகளுடன் அனிதா தலைமறைவானார். பாதிக்கப்பட்ட நபரின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அனிதாவுக்கு இது 6வது திருமணம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, 7வதாக திருமணம் நடைபெற இருந்த நிலையில் போலீசார் அனிதாவை கைது செய்தனர். கடந்த காலங்களில் இதேபோல் பலரை ஏமாற்றியதும் தெரியவந்தது.