
பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டர், 6 பேர் மீது மோதிய கார், பெரும் பரபரப்பு நிகழ்துள்ளது …!
தெலங்கானா வாரங்கல் அருகே ரபீக் என்பவர் தன்னுடைய புது காருக்கு பூஜை போட்டுவிட்டு திரும்பி சென்றுள்ளார். இந்நிலையில் கூட்ட நெரிசல் இருந்த நிலையில், ரபீக் பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார் அங்கிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை இடித்துத் தள்ளியபடி சென்றுள்ளது.
அப்போது ரோட்டில் சென்று கொண்டிருந்த சில பேர் நிலைமையை உணர்ந்து சாலையோரம் செல்வதற்குள், அந்த கார் அவர்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இவ்விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரபீக்கை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.