தமிழகம் முழுவதும் கொலை, குத்து போன்ற சம்பவங்கள் வருடத்துக்கு வருடம் மாதத்திற்கு மாதம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. இந்நிலையில், கடந்த 2003 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 53 கொலைகள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பழிக்கு பலி முன்விரோதம் என பல காரணங்களால் இதுவரை 32 கொலைகள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து கொண்டு வரும் கொலைகளை தடுக்க தற்போது குற்றவாளிகளின் பட்டியலை அம்மாவட்டத்தில் உள்ள போலீசார் தயாரித்துள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது என்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இது குறித்து போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், தமிழகம் முழுவதும் ஏற்படும் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வருகிறது மேலும் இது பொது மக்களிடையே மிகவும் பயத்தையும் ஏற்படுத்துகிறது.