உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது 6 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த நண்பரின் பிறப்புறுப்பை தந்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது மனைவியைப் பிரிந்து தனது நண்பரான ராம்பாபு யாதவ் (35) என்பவருடன் தங்கியிருந்தார். சமீபத்தில், அந்த நபர் தனது 6 வயது மகளைத் தன்னுடன் தங்க வைத்திருந்தார். அப்போது, ராம்பாபு யாதவ் அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதனால், தந்தை இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.




