6 வருடங்களாக குழந்தை இல்லை..!! வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட மனைவி..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள மீனவ குப்பத்தில் வசித்து வருபவர் பவுன் ராஜ்.

இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக சுபா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது .திருமணமாகி ஆறு ஆண்டுகளாகியும் இத்தம்பதியருக்கு குழந்தை பிறக்கவில்லை. குழந்தை பிறக்கவில்லை என்ற உடன் சுபா தான் இந்த குழந்தை இன்மைக்கு காரணம் என்று அவரை குறை கூறி குற்றம் சாட்டி கணவர் குடும்பத்தினர் அவரை துன்புறுத்தி வந்துள்ளார்.

மேலும் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர். ஆறு ஆண்டுகளாக இந்த கொடுமைகளை தாங்கிக் கொண்டு வந்த சுபா  ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

மனைவி சுபா  தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமாக இருந்த கணவரின் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர். சுபாவின் பெற்றோர்கள் கதறி அழுது மகளின் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.

Read Previous

நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு “பத்து தல” திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ்..!!

Read Next

ரேக்ளா வண்டியில் மணமக்களை ஊர்வலமாக அழைத்துச் சென்ற உறவினர்கள்..!! வைரலாகும் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular