60 வயது கள்ளக்காதலி கொலை: 31 வயது இளைஞரின் அதிர்ச்சி செயல்..!! அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்.!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் பகுதியை சார்ந்தவர் தேவேந்தர் (வயது 31) இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லிக்கு வேலை தேடி சென்றுள்ளார். சரிவர வேலை கிடைக்காத காரணத்தால் தனது தந்தையிடம் தான் ஜெர்மனிக்கு படிக்க செல்வதாக கூறியுள்ளார். அவரும் தனது பெயரில் இருந்த நிலத்தை விற்பனைக்கு செய்து பணம் அனுப்பினார்.

தற்போது வரை தந்தையிடம் இருந்து வெளிநாட்டில் படிப்பதாகவும் பணம் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டில் இவர் ஆசா தேவி (வயது 60) என்ற பெண்ணின் வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளார். ஆசாதேவி -தேவேந்திரனுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கள்ளக்காதல் வாழ்க்கையை அனுபவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஆசாதேவியின் வாடகை வீட்டில் இளம்பெண் ஒருவர் குடியேறி உள்ளார்.

அவரிடம் தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகம் செய்த தேவேந்திரன் நட்பு ரீதியாக பழக்கத்தை ஏற்படுத்தினார். பின் அந்த பெண்ணை தனது காதல் வலையில் வீழ்த்தியவர் பெண்ணின் சகோதரருக்கு சிபிஐயில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் பெண்மணி தேவேந்தரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்க கடந்த டிசம்பர் நான்காம் தேதி இருவருக்கும் இடையில் நிச்சயம் முடிந்தது.

கடந்த பத்தாம் தேதி விவகாரம் ஆசாதேவிக்கு தெரிய வந்தது. அவர் தேவேந்திரனை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வர சொல்லி உள்ளார். அங்கு தேவேந்திரனின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தேவேந்தர் ஆசாதேவியை செங்கல்லால் தாக்கி கொடூரமாய் கொலை செய்தார்.

பின் உடலை பிளாஸ்டிக் அவரை சுற்றி வீட்டில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கழித்து அழுகிய துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினால் டிசம்பர் 15ஆம் தேதி அன்று காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் பெண்ணின் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர்.

அப்போது ஆசாதேவியின் அழுகிய சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை அம்பலமாகியது. காவல் துறையினர் தேவேந்திரனை கைது செய்துள்ளனர். விசாரணையில் மேற்கூறிய அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.

Read Previous

அதிவேகத்தில் தறிகெட்டு வந்த லாரி: சாலையோர உணவகத்தில் புகுந்து 4 பேர் உடல் நசுங்கி பலி.!! 2 பேர் படுகாயம்.!!

Read Next

சாலை தடுப்பில் மோதி விபத்திற்குள்ளான கார்,.!!3 பேர் உயிருடன் எரிந்து உடல் கருகி பலி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular