சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான vivo, y58 என்கிற 5g போனை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. 50 மெகாபிக்சல் டூயல் கேமராக்களுடன் உருவாகியிருக்கும் இந்த போன் ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. 8gb ரேம், 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 6.72 இன்ச் ஃபுல் hd டிஸ்ப்ளே, 2 நானோ சிம் சப்போர்ட், ஆண்ட்ராய்டு 14, 120ஹெர்ட்ஸ் ரெப்பிரஷ் ரேட் ஆகியவை இந்த மொபைல் போனின் சிறப்பம்சங்கள் ஆகும். மேலும் 6000 mah பேட்டரியை கொண்டுள்ளதால் ஒருமுறை சார்ஜ் செய்தால் 73 மணி நேரம் பிளே பேக் நேரத்தையும், 23 நேரம் youtube வீடியோ பிளே பேக் நேரத்தையும் இந்த பேட்டரி வழங்கும் என கூறப்பட்டுள்ளது