
65 வயதை கடந்தவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
65 வயதை கடந்தவர்கள் தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்துங்கள் அடைத்துக் கொண்ட உணவானது தானாக இறங்கும். ஏனெனில் சாப்பிடும் போது அவசரமாக சாப்பிட்டாலும் வயதானவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே மேலே கூறியவாறு கண்டிப்பாக செய்வதன் மூலம் உணவு அடைத்துக் கொள்ளாமல் இருக்கும். கண்டிப்பாக தூங்குவதற்கு சரியான தலை அணையை உபயோகிங்கள். ஏனென்றால் தவறான தலையணையை யூஸ் பண்ணும்போது கழுத்து வலி உண்டாகும்.
கால்களில் வலி ஏற்படும் போது கால் விரல்களை மிருதுவாக பிசைந்து கொள்ளுங்கள் வழி உடனே சரியாகும். கால்களில் திடீரென தசை இறுக்கமோ அல்லது சுளுக்கு ஏற்பட்டது போல் வழியோ வந்தால் எதிர்பக்க கையை உயர்த்த வேண்டும். வலது கால் வலித்தால் இடது கையையும் இடது கால் வலித்தால் வலது கையையும் உயர்த்துங்கள். திடீரென பாதத்தில் கூச்சம் ஏற்பட்டால் எதிர்ப்புரத்து உள்ளங்கையை வேகமாக சுழற்றுவதன் மூலம் அதை சரி செய்யலாம்.