7ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை – ஆசிரியர்கள் மீது வழக்கு..!!

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் சமீபத்தில் 7ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி மாலை, பள்ளியில் சில ஆசிரியர்களால் உடல் மற்றும் மனரீதியாக சித்திரவதைக்கு உள்ளானதை அடுத்து, சிறுவன் வீட்டில் இந்த விபரீத முடிவை எடுத்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

ஆசிரியர்கள் மீது ஐபிசி பிரிவு 324 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத சிறார் நீதிச் சட்டத்தின் பிரிவு 75 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read Previous

இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: தந்தை, மகன் பலி..!!

Read Next

அஞ்சல் துறையில் அதிக வட்டி கிடைக்கும் சேமிப்பு திட்டம் – முழு விவரம் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular