7 நாட்களில் பாத வெடிப்பு நீங்க வேண்டுமா?.. இதோ அற்புதமான வழி?..

அதிகப்படியான வெயில் கால்களில் படுவதால், கால்கள் வறண்டு விடுகிறது.  மேலும் கால்களில் உள்ள எண்ணெய் பசையையும் வெயில் உறிஞ்சிவிடுவதோடு, கால்களும் மென்மையை இழந்துவிடும்.

மேலும் சிலர் பாதங்களைச் சுத்தமாக வைத்து கொள்வதில்லை.  இதனால் பாத வெடிப்புகள் வரும்.  அதைப் போக்க உதவும் சில எளிய வழிகள் என்ன என்று பார்ப்போம்.

எலுமிச்சை பழத் தோல்
எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும்.  இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தைச் சுத்தமாக்கும்.  மேலும் கிருமிகளையும் ஒழிக்கும்.

கடுகு எண்ணெய்
தினமும் இரவு தூங்கும் போது, கடுகு எண்ணெயை பாத வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் பாத வெடிப்பு பிரச்சனை சரியாகும்.

தேன் மற்றும் சுண்ணாம்பு
தேன் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்றாக குழைத்து கொள்ளவும். பின்பு இந்த கலவையை இரவு தூங்கும் போது கால்களில் போட்டு வந்தால் பாத வெடிப்புகள் மறைந்து விடும்.

சொரசொரப்பான கற்கள்
தினமும் குளிக்கும் போது சொரசொரப்பான கற்களில் உங்கள் கால்களை தேய்த்தாலும் பாதத்தில் உள்ள வெடிப்புகள் மறைந்து விடும்.

தேங்காய் எண்ணெய்
தினமும் இரவு தூங்கும் போது கால்களில் தேங்காய் எண்ணெயை தடவி வந்தாலே கால்களில் உள்ள வெடிப்புகள் சரியாகும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கைகாய வைத்து தூளாக்கிப் பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும் வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதம் மிளிரும்.

வேப்பிலை மற்றும் மஞ்சள்
சிறிதளவு வேப்பிலை, சிறிதளவு மருதாணி மற்றும் சிறிதளவு பச்சை மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பாத வெடிப்பு உள்ள இடத்தில் போட்டு வர பாத வெடிப்புகள் சரியாகும்.

Read Previous

அடேங்கப்பா.. ‘கல்கி 2898 AD’ படத்தின் வசூல் இத்தனை கோடியா?..

Read Next

ஆண்களின் இடுப்பு வலியை நீக்க உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular