7 மாத டியூசன் காதல்..!! கைகளை துப்பட்டாவால் கட்டிக்கொண்டு உயிரைமாய்த்த 14 வயது சிறுமி, 16 வயது சிறுவன்.!!

சென்னையில் உள்ள திருவெற்றியூரில் கடற்பகுதியில் இன்று இரண்டு சடலங்கள் கரையோரம் ஒதுங்கியது. தகவல் அறிந்து வந்தார் திருவொற்றியூர் காவல் துறையினர் இரண்டு சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் 14 வயது மற்றும் 16 வயது மதிக்கத்தக்க பெண்- ஆண் சிறார்கள் என கூறப்படுகிறது. சிறார்கள் கையில் துப்பட்டா கட்டப்பட்டு இருந்தது. இதனால் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் பலியான இருவரும் மாதவரம் பால் பண்ணை பகுதியை சார்ந்த சிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் இருவருக்கும் டூசன் சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டது. நட்பாக தொடங்கிய பழக்கம் காதலாக மாறி இருவரும் ஏழு மாதமாக காதலித்து வந்தனர், இதனிடையே அவர்கள் தங்களின் கைகளை துப்பட்டாவால் கைகளை கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதை உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Read Previous

நள்ளிரவில் பதம்பார்த்த நாய்கள்..!! 9 ஆடுகள் பலி., 6 ஆடுகள் படுகாயம்.!!

Read Next

அரசு பேருந்து மோதி மருந்து விற்பனை பிரதிநிதி பரிதாப பலி..!! 22 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular