7G ரெயின்போ காலனி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் இவர்கள்தானா?.. வைரலாகும் தகவல்..!!

தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இன்று வரை இந்த படம் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது செல்வராகவன் இந்த படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு அவருக்கு ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என தோன்றிய நடிகர்கள் சூர்யா மற்றும் மாதவன் தான் என தெரிவித்துள்ளார்.

அப்போது இருவரும் வேறு படங்களில் பிசியாக இருந்த காரணத்தினால் ரவி கிருஷ்ணாவை ஹீரோவாக தேர்வு செய்துள்ளார். அதேபோல் 300 பெண்களை ஆடிஷன் செய்த பிறகு நாயகியாக சுப்பிரமணியபுரம் பட புகழ் சுவாதியை தேர்வு செய்துள்ளார்.

அதன் பிறகு சுவாதி 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு எம்பிபிஎஸ் படிப்பில் சிரமம் ஏற்பட்ட காரணத்தினால் இந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அதற்கு அடுத்ததாக தான் கோவில் படத்தின் இறுதி படப்பிடிப்பில் பங்கேற்று வந்த சோனியா அகர்வால் படக்குழு கமிட் செய்துள்ளது.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Previous

மோசடி வழக்கில் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!!

Read Next

இஞ்சி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular