8 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த கொடூரன்..!! உடலெல்லாம் கடித்து வைத்து சித்தரவதை.!!

பாலியல் குற்றங்களை குறைக்க கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பு என்றுதான் தீருமோ என ஒவ்வொரு துயரமும் நடக்கும்போது கேள்விகள் எழுவதுண்டு .

தலைநகர் டெல்லியில் நடக்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பான விஷயங்கள் இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. ஏனென்றால் இந்தியாவின் தலைநகராக கருதப்படும் நகரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் உலக அளவில் அறியப்படும் என்பதால் அவை பெரும் கவனத்தை பெறுகின்றது. அந்த வகையில் டெல்லியில் தற்பொழுது துயரம் ஒன்று நடைபெற்றுள்ளது.

டெல்லியில் உள்ள முபாரக்பூர் பகுதியில் எட்டு வயதுடைய சிறுமி தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று சிறுமி தனது வீட்டில் வெளியே இருந்தார் அதேசமயம் சிறுமி மர்ம நபர் ஒருவரால் கடந்தி செல்லப்பட்டார். சிறுமியை கடத்தி சென்ற கயவன் அவரை ஒருநாள் முழுவதும் கட்டி வைத்துள்ளார். பின் சிறுமையை கட்டி வைத்தவாறு அவரின் உடலில் பற்களால் கடித்து சித்திரவதை செய்த அந்த கொடூரன். ஒரு கட்டத்தில் அவரிடம் பாலியல் ரீதியாக அத்து மீறி உள்ளார்.

பின் சிறுமியின் வீட்டு அருகே உள்ள பகுதியில் சிறுமியை கொண்டு வந்து விட்டு  கயவன் தப்பி ஓடினான். பாதிக்கப்பட்ட சிறுமையை காணாது பெற்றோர் முன்னதாகவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.வீட்டிற்கு வந்த சிறுமியின் உடலில் இருந்த காயங்கள் பெற்றோருக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்த அவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து நடத்திய விசாரணையில் நடந்த துயரம் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த கயவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read Previous

அரசியல் தமிழகம் இந்தியா உலகம் வீடியோ சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் வெப் ஸ்டோரீஸ் Search… 2 ஆண் நண்பர்களுடன் தனிமையில் உல்லாசம்; நேரில் சென்று வெளுத்தெடுத்த கணவன்..!! காவல்துறை வைத்த ட்விஸ்ட்.!!

Read Next

தன்னை மறந்த காதலியை வீடுபுகுந்து சரமாரியாக குத்திக்கொன்ற காதலன்..!! நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular