
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரை சேர்ந்த 80 வயது மூதாட்டியை இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மூதாட்டி போலீசில் அளித்த புகாரில், “என் மகளை காண நடந்து சென்று கொண்டிருந்தேன், அப்போது மதுபோதையில் வந்த நபர் ஒருவர் என்னை தூக்கி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பலாத்காரம் செய்தார்” என்றார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.