2024 ஃபெடரேஷன் கோப்பை தொடரானது ஒடிசாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இத்தொடரில் நீண்ட மாதங்களுக்கு பிறகு நீரஜ் சோப்ரா பங்கு பெற்றதால், இவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நீரஜ் சோப்ரா சிறப்பாக செயல்பட்டார்.
இத்தொடரின் இறுதிச்சுற்றில் 82.27மீ தூரம் எட்டி எறிந்து அசத்தினார். இதன் மூலம் ஃபெடரேஷன் கோப்பையில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதற்கு முன்னர் டைமண்ட் லீக், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சரித்திரம் படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.