85 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!! 57 வயது மதுபோதை ஆசாமி அதிர்ச்சி செயல்.!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் 85 வயதுடைய மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் செல்வராஜ் (வயது 57) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் சலவை தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார், மது போதைக்கு அடிமையான செல்வராஜ் அவ்வப்போது மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவ தினத்தன்று மூதாட்டி தனது வீட்டில் இருந்த நிலையில் அங்கு வந்து செல்வராஜ் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அவரை கொலை செய்து விடுவதாக விரட்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் பதறிப்போன மூதாட்டி சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் செல்வராஜ் மீது ஏற்கனவே பாலியல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவர் மூதாட்டி இடம் தவறாக நடக்க முயற்சித்ததன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

காதலியின் கண்முன் காதலனை துள்ளத்துடிக்க கொலை செய்த கும்பல்..!! நெல்லையில் பகீர் சம்பவம்.!!

Read Next

இறந்தும் உயிர்வாழும் பெண்மணி..!! மூளைச்சாவடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புக்கள் தானம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular