
90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான தீன்பண்டங்களில் ஒன்று தேன் மிட்டாய். இந்த சுவையான தேன்மிட்டாய் எவ்வாறு செய்வது என்பது குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- உளுத்தம் பருப்பு
- அரிசி
- சர்க்கரை
- பேக்கிங் சோடா
- புட் கலர்
- எண்ணெய்
செய்முறை
முதலில் தேவையான அளவு உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை சுத்தம் செய்து 2 மணி நேரம் நன்றாகஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரிசி மற்றும் உளுந்து ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து அதில் பேக்கிங் சோடா, புட் கலர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும் .
அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு ஏறியதும் மாவை சிறுசிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க விடவும்.
சர்க்கரை ஒரு கம்பி பதத்திற்கு வந்ததும் அதனை இறக்கி வைத்து அதில் பொறித்து வைத்துள்ள மிட்டாய்களை சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வையுங்கள். அவ்வளவுதான் சுவையான தேன்மிட்டாய் தயார்.