95 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு..!!

உலக நாடுகளில் மக்கள் தொகை பிரச்சினை என்பது பேசும் பொருளாகவே உள்ளது. ஒரு சில நாடுகளில் மக்களின் தொகை அதிகமாக இருப்பதால் ஒரு வீட்டிற்கு ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டமே அரசாங்கம் வகுத்து உள்ளது .ஒரு சில நாடுகளில் மக்கள் தொகை குறைந்து இருப்பதால் வீட்டில் கண்டிப்பாக இத்தனை குழந்தைகள் இருக்க வேண்டும் என்றும் அதற்கான பொருளாதார செலவுகளை அரசை ஏற்றுக்கொள்வதாகவும் கூறி வருகின்றது.

ஆனால் ஒரு நாட்டில் 95 ஆண்டுகளாக குழந்தைவே பிறக்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயமாக உள்ளது. உலக நாடுகளில் முக்கியமான கிறிஸ்தவ தலைவர்கள் வசிக்கும் கிறிஸ்தவர்களின் மூத்த தலைவர் போப் ஆண்டு வரும் வாடிகன் தான் இந்த நாடு. மேலும் உலகில் இருக்கும் ஒட்டுமொத்த கிறிஸ்தவ குடும்பம் இவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று கூறலாம். இந்த நாடு 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி முழு சுதந்திர உரிமையை பெற்றுக்கொண்டது. அதிலிருந்து இன்று வரை இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை. இந்த நாட்டில் குடியேற  வேண்டும் என்றால் அவர் ஒரு பாதிரியாராக அல்லது துறவியாக இருக்க வேண்டும்.

அவர்களின் பதவி காலம் முடியும் வரை தான் இந்த நாட்டில் வசிக்க முடியும் என்பதால் இந்த வாடிகன் நாட்டில் நிரந்தர குடியுரிமை என்பது கிடையாது. மேலும் இது மிகவும் சிறிய நாடு என்பதால் மருத்துவமனை வசதி கேட்டும் கொடுக்கப்படவில்லை. அதன் அருகிலேயே பெரிய வசதிகளுடன் கூடிய மருத்துவமனை இருப்பதால் பெண்கள் தங்களுடைய பிரசவம் நெருங்கும் நேரத்தில் பக்கத்தில் உள்ள ரோம்க்கு சென்று தங்கி பிரசவம் பார்க்க வேண்டும். ரோம் நாட்டின் குடியுரிமை அந்த குழந்தைங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த நாட்டில் குழந்தை கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் 95 ஆண்டுகளாக இந்த நாட்டில் எந்த ஒரு குழந்தையும் பிறக்கவில்லை என கூறப்படுகிறது.

Read Previous

மலேசியாவில் நடைபெற்ற பேய் திருமணம்..!! வினோத சடங்கு..!!

Read Next

சூடு பிடிக்கும் விக்கிரவாண்டி தேர்தல் களம்..!! ஒரே நாளில் ஏழு பேர் மனதாக்கல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular