சாதாரண மக்களைக் காட்டிலும் திரை துறை நடிகைகளுக்கும் பாலியல் சீண்டல் இருப்பதாக புகார் வந்த நிலையில் கேரளா அரசு அதிரடி உத்தரவு..
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தருவதை பற்றி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி உள்ளது, மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இந்த குற்றச்சாட்டினை விசாரிக்க ஏழு பேர் கொண்டுள்ள குழுவை நியமித்துள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார், அதன்படி ஐஜி தலைமையில் பெண் தலைமை ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து நடிகைகளுக்கான பாலியல் தொல்லை தொடர்பான நபர்களை விரைவில் கைது செய்து அவருக்கான தண்டனை வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார், பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது பாகுபாடு இன்றி நடக்கிறது அது சாதாரண பெண்கள் முதல் சமத்துவம் பேசும் பெண் வரை தொடங்கி வசனங்களை பேசும் நடிகைகளுக்கும் பெரும் அவல நிலையாகவே உள்ளது என்று கூறினார்…!!



