தற்போது கொலை கொள்ளை தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகின்ற நாட்களில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே குடும்பத்தகராறில் மாமனாரை சுற்று கொன்ற மருமகன் அதிர்ச்சியில் குடும்பமும் பொதுமக்கள் அலறலில் உறவினர்கள்…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே குடும்ப தகராரின் காரணமாக எல்லப்பாளையத்தை சேர்ந்த மாமனார் பழனிசாமியை மருமகன் ராஜ்குமார் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டு உள்ளார், தொடர்ந்து அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலையும் செய்து கொண்டார், மேலும் சம்பவம் அறிந்த காங்கேயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, மேலும் மாமனாரையும் துப்பாக்கியால் சுட்டு தன்னையும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட மருமகன் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதனைத் தொடர்ந்து காங்கேயம் காவல்துறை தகவலின் பெயரில் கொலைக்கான விசாரணை என்னவென்று அவர்களின் குடும்பத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…!!




