நண்பர்கள் Rocked மணமகள் Shocked..!! ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டுக்கொடுத்த மணப்பெண்..!!

பொதுவாக திருமணம் முடிந்ததும் ஆண்கள் தன் நண்பர்களுடன் இருக்கும் உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று மணமகள் சிலர் கட்டளையிடுவார்கள். இதனால் நட்பு முறிந்துவிடும் என்று ஆண்கள் சிலர் திருமணத்தை கண்டு அஞ்சுகிறார்கள். இந்நிலையில், சீர்காழியில் நடந்த ஒரு திருமணத்தில் நண்பர்கள் செய்த அலப்பறை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீர்காழி மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் நேற்று ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணிடம் “திருமணத்திற்கு பின்பும் என் கணவர் நண்பர்களுடன் சினிமாவிற்கு செல்ல நான் அனுமதிப்பேன், வீட்டிற்கு வர தாமதமானால் சினிமா வில்லி போல் எப்போ வருவீங்க என்று கேட்கமாட்டேன், கோவா, பாண்டிச்சேரி போன்ற பயணங்களுக்கு நான் அனுமதிப்பேன்” என்று கூறி 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அதை மணமகளும் ஏற்றுக்கொண்டு பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். இது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read Previous

மனைவியின் மனதை எப்படி வெல்வது?.. சில முக்கியமான டிப்ஸ்..!!

Read Next

முதலீடு செய்ய விருப்பமா?.. மாதம் ரூ.20,000/- வழங்கும் சூப்பர் திட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular