அதிகாரத்தில் இருப்பவரை வைத்து மது ஒழிப்பு மாநாட சாத்தியமா..!!

விடுதலை சிறுத்தை கட்சி மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகள் மது ஒழிப்பு மாநாடுக்காக இணைந்து செயல்படுவதாக தெரிவித்து வந்த நிலையில், தற்போது அதிகாரத்தில் இருப்பவர்களை வைத்து மது ஒழிப்பு மாநாடு சாத்தியமாகுமா என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்…

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி காண வாய்ப்பு அதிகரித்து வருவதாக தாமாக தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ள நிலையில், ஆட்சியில் கூட்டணி அதிகாரத்தில் பங்கு என தற்போது அனைத்து கட்சிகளும் எதிர்பார்க்க தான் செய்கிறது என்று கூறியுள்ளார், மேலும் மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்து சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்துவது வேடிக்கையாகவும் புதிராகவும் இருக்கிறது என்று குற்றம் சாடியுள்ளார், மது ஒழிப்பு மாநாடு தமிழகத்தில் நடத்த முடியும் ஆனால் மதுவை ஒழிப்பது என்பது தமிழகத்தில முடியாத ஒன்றாகும், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டை நடத்துவது என்பது வேடிக்கையாக இருக்கிறது அதிகாரத்தில் இருப்பவர் நினைத்திருந்தால் மது ஒழிப்பு மாநாட்டை எப்போதே நடத்திருக்கலாம் நாட்டையும் திருத்திருக்கலாம், ஆனால் கூட்டணி கட்சிகளோடு மது ஒழிப்பு மாநாடு என்பது சாத்தியமற்றது என்று ஜி.கே வாசன் குற்றம் சாட்டியுள்ளார்..!!

Read Previous

கன்னட பட உலகில் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை..!!

Read Next

துணை முதலமைச்சர் பதவிக்கு இன்று முக்கிய அறிவிப்பு…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular