பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த விலையில் ஒரு சில கிராம் எடை கூடியதன் காரணமாக ஒலிம்பிக்கை விட்டு வெளியேறி உள்ளார், மேலும் தனது ரயில்வே பணியை ராஜினாமா செய்து காங்கிரஸ் ஆட்சியில் தனது
வாழ்வை அர்ப்பணித்துள்ளார், மேலும் தான் அரசியலுக்கு வந்த காரணத்தை அவர் எடுத்துரைத்துள்ளார்..
அரசியலுக்கு வந்தது ஏன் என்று வினேஷ் போகத் விளக்கம் அளித்துள்ளார், அதில் அதிகாரத்தில் இல்லாவிட்டால் இங்கு எதுவும் செய்ய முடியாது ஒலிம்பிக்கில் நூற்றுக்கணக்கான பதக்கங்களை வெல்லலாம் ஆனால் அது அரசியல் அதிகாரத்துக்கு ஈடாகாது ஒரே இரவில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த நாடு முடங்கியது, ஆனால் அரசியல் அதிகாரத்தின் சக்தி பிரிஜ் பூஷனும் அந்த அதிகாரத்தை வைத்து தப்பிக்கிறார் என அவர் விமர்சித்துள்ளார், மேலும் நாட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை தனி மனிதராக இருந்து செய்வது கடினம் ஆனால் அரசியலில் இருந்து கொண்டு உதவுவது என்பது சாத்தியமான செயலாகும் என்றும் அவர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்..!!




