சிறு பிள்ளைகளுக்கு ஆண்ட்ராய்ட் போன் வழங்கி அதற்கு அடிமையாக்கி விடாதீர்கள்..!!

கணவனை பிரிந்த பெண் ஒருவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு செல்கின்றார்…

அங்கு பொழுது போக்குவதற்காக சமூக வலைத்தள கணக்கினை ஆரம்பிக்கின்றார் நாளடைவில் அடிமையும் ஆகின்றார்.

உலகத்தில் நடக்கும் விடயங்களையும், ஊரில் நடக்கின்ற விடயங்களையும் தெரிந்து கொள்கின்றார், பல நண்பர்களின் தொடர்பும் ஏற்படுகின்றது ஆனால் அவர் குடும்பத்தில் என்ன நடக்கின்றது, அவரை சுற்றியுள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது அவருக்கு தெரியவே இல்லை.

சம்பாதித்த பணத்தில் நன்றாக படித்துக் கொண்டிருந்த 18 வயது கூட ஆகாத தனது மகனுக்கு பைக்கும், ஆண்ட்ராய்ட் போனும் வாங்கிக் கொடுக்கின்றார் மகன் சில மாதங்களில் பாடசாலையை விட்டும் இடை விலகுகின்றான்.

நன்றாக படித்து பல்கலைக்கழகம் செல்வார்கள் என எதிர்பார்த்த தனது சகோதரிகளுக்கு ஆண்ட்ராய்ட் போன் வாங்கிக் கொடுத்தார் பல்கலைக்கழகம் செல்வதற்கு பதிலாக தொலைபேசியில் அறிமுகமான ஒருவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதை வாசிக்கும் நண்பர்களே…

உலகத்தில் என்ன நடக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் உங்கள் குடும்பத்திலும் என்ன நடக்கின்றது என்பதிலும் கவனம் செலுத்துங்கள்.

சிறு பிள்ளைகளுக்கு ஆண்ட்ராய்ட் போன் வழங்கி அதற்கு அடிமையாக்கி விடாதீர்கள் அது வாழ்க்கை பயணத்தையே திசை திருப்பி விடும்.

Read Previous

வெள்ளை பூசணியில் அதிக நன்மைகள் உள்ளது..!!

Read Next

இளம்பெண் கொடூர கொலை..!! சம்பவத்தன்று என்ன நடந்தது?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular