இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நரம்பு தளர்ச்சியால் அவதிப்பட்டு வருகின்றனர், அப்படி நரம்புத் தளர்ச்சி ஏற்படுவதற்கு முதன்மை காரணமாக இருப்பது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தின் அளவு மிக சீராக இருப்பதை ஆகும், உடலில் உள்ள ரத்த ஓட்டம் சரியான முறையில் இருந்தால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுவது என்பது இல்லாத காரியம்..
பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் அதனைத் தொடர்ந்து ரத்தத்தை உருவாக்கும், அதேபோல பேரிச்ச பழத்துடன் சிறிதளவு பாதாம் பருப்பு சேர்த்து நாட்டு பசும்பாலில் ஊற வைத்து பின் கொதிக்க வைக்க வேண்டும், ஆறிய பின்பு அதனை சாப்பிட்டு வருவதன் மூலம் நரம்புத்தளர்ச்சி ஞாபக சக்தி மற்றும் கைகால் தளர்ச்சி குணமாகும், பேரீச்சம் பழத்தை பாலில் கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைக்கும், தினந்தோறும் ஒரு பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மற்றும் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும்…!!




