உங்க கேஸ் சிலிண்டர் உடனே காலியாகுதா?.. அப்போ இந்த ட்ரிக்ஸ ஃபாலோவ் பண்ணுங்க..!!

முந்தைய காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் ஒரு சில வீடுகளில் மட்டுமே சிலிண்டர் உபயோகித்து வந்த நிலையில் , தற்போது மத்திய அரசு திட்டத்தின் மூலமாக நகர்புறம் மற்றும் கிராமப்புறம் என்ற அனைத்து இடங்களிலும் கேஸ் சிலிண்டர் இல்லாத வீடே இல்லை என்ற நிலைக்கு வந்துள்ளது . அத்தகைய கேஸ் சிலிண்டர் எப்படி உபயோகிப்பது மற்றும் எப்படி USE பண்ணா அதிக நாளைக்கு வரும் என்று பார்க்கலாம் வாருங்கள்.

1. கேஸ் சிலிண்டரில் இருக்கும் பர்னரை அடிக்கடி சுத்தம் செய்தால் , கேஸ் அதிகம் வீணாகாமல் இருக்கும்.

2. கேஸ் சிலிண்டருக்கு பயன்படுத்தப்படும் குழாயை அடிக்கடி சரிபார்ப்பதன் மூலமாக கேஸ் சிலிண்டர் வீணாவதை தடுக்கலாம்.

3. அடுப்பில் ஈரமான பாத்திரத்தை வைப்பதை தவிர்த்து உலர்ந்த பாத்திரத்தை வைத்து உபயோகிப்பது நல்லது.

4. அடுப்பில் பாத்திரத்தை வைத்து சமைக்கும் போது, பாத்திரத்தை மூடி வைத்து சமைத்தால் உணவு விரைவாக ஆவியாகி கேஸ் வீணாகாமல் இருக்கும்.

5. ஃபிரிஜில் இருந்து எடுத்த பொருட்களை கொண்டு உடனே சமைத்தால் அது ரெடியாக அதிக நேரம் எடுக்கும் . ஆதலால், பொருட்கள் உலர்ந்த பிறகு சமைப்பது நல்லது.

6. குக்கரில் உணவு சமைப்பதன் மூலமாக உங்களுக்கு அதிக கேஸ் வீணாகாமல் இருக்கும். மற்றும் கேஸ் அடுப்பில் சமைத்து முடித்த பிறகு உடனே அடுப்பை அணைக்கவும். இத்தகைய வழிமுறைகள் மூலமாக நீண்ட காலத்திற்கு உங்களது சிலிண்டரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Read Previous

IOCL ஆணையத்தில் வேலை அறிவிப்பு..!! சம்பளம் ரூ.50,000/-..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

ஆண்மையை அதிகரிக்கும் 5 வகையான கீரை வகைகள்..!! இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular