இன்றைய காலகட்டத்தில் பலர் வேலை என்று ஓடிக்கொண்டு சத்தான உணவு முறையை பின்பற்றுவதை முற்றிலுமாக தவிர்க்கின்றனர். இதனால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். மேலும், வீட்டில் தினந்தோறும் சமைக்கும் உணவு மீதமாக இருந்தால் அதை ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில், இவ்வாறு உணவுகளை சூடு படுத்தி சாப்பிடுவதால் பெரும் ஆபத்து உண்டாகும் என்பதை பற்றி அறிந்தும் அலட்சியமாக இருக்கின்றனர். இந்நிலையில் சில உணவுகளை சூடு படுத்தி சாப்பிட்டால் ஆபத்துக்கள் ஏற்படும். அது எந்தெந்த உணவுகள் என்பதை பற்றி தற்போது நாம் பார்க்கலாம்.
சிக்கனை நாம் இவ்வாறு சூடு படுத்தி சாப்பிடுவதன் மூலம் புட் பாய்சன் ஏற்படும் மற்றும் பல உடல் உபாதைகள் நேரிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த வகையில் கீரையையும் நாம் இவ்வாறு சாப்பிடக்கூடாது இதில் இருக்கும் நைட்ரேட்ஸ் நைட்ரைட் ஆக மாறி புற்றுநோயை உண்டாக்கும். மற்றும் முட்டை காளான் போன்றவற்றை நாம் இவ்வாறு சூடு படுத்தி சாப்பிட்டால் வயிற்று உபாதைகள் ஏற்படும். பழைய சாதத்தை சூடு படுத்தி சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள நச்சுத்தன்மை அதிகரித்து ஃபுட் பாய்சன் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றும் ஏற்கனவே யூஸ் பண்ண எண்ணையை மறுபடியும் சூடு செய்து அதை உண்பதன் மூலம் இதய நோய் ஏற்படும். இதனால் அன்றைக்கு சமைத்த உணவுகளை அன்றே சாப்பிடுவது மிகவும் நல்லது. அடுத்த நாள் சூடு படுத்தி சாப்பிட்டால் இப்படித்தான் பல உபாதைகளுக்கு நாம் ஆளாக நேரிடும்.



