சமையல் மாஸ்டர் தூக்கு போட்டு தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!
மதுரை ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் 41. இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது இடது காலில் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை அகற்றிவிட்டனர். இவருக்கு விரல்கள் இல்லாததால் சமையல் வேலைக்கு யாரும் அழைப்பதில்லை.
இதனால் மனமுடைந்து வீட்டில் மின்விசிறி கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய தந்தை சக்கையன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




